புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல், ஜிஎஸ்டி தாக்கல், ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டில்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
வருமான வரி கணக்கு, ஜிஎஸ்டி தாக்கலுக்கு அவகாசம்