7 மாதங்களுக்கு பின் ஒமர் அப்துல்லா விடுதலை

மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.


ஸ்ரீநகர்: கடந்த 7 மாதங்களாக வீட்டுக் காவலில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.